Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர் பழனியப்பன் பணாலானது எப்படி? பரபரப்பு பின்னணி தகவல்

அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருப்பவர்களில் பலருக்கு வாய்ப்பு  நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதில், முக்கியமானவர் பழனியப்பன்.  
கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், உயர் கல்வித்துறை அமைச்சர்,  ஐவர் அணியில் ஒருவராக இருந்தவர் என அ.தி.மு.க.வின் முக்கியமான முகங்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருந்த  பழனியப்பனை ஒரேயடியாக தூக்கிவீசிவிட்டார் ஜெயலலிதா.
 

கடந்த சில மாதங்களாக சீக்ரெட்டாக நடந்து வரும் அமைச்சர்கள் மீதான  என்கொயரியில் பழனியப்பனும் அடக்கம். ஓ.பி.எஸ், நத்தம் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பழனியப்பனுக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றரை மாதங்களாகவே வெளியில் எங்கும் தலைகாட்டாத பழனியப்பனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டது. கிட்டதட்ட தலைமறைவாகவே இருந்த பழனியப்பன்,  சில தினங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல்  குடும்பத்தோடு தருமபுரி காலபைரவர் கோயிலுக்கு வந்து,  நீண்ட நேரம் வணங்கிவிட்டு சென்றார். எல்லாம் நல்லபடியாவே நடக்கணும் என்று மட்டும் வேண்டிக் கொண்டாராம். நண்பர்களிடத்தில் கூட பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் பழனியப்பன்.

'சீட்' டுக்கு பணம் வசூலித்தார்கள், சொத்துகள் வாங்கினார்கள் என்று அமைச்சர்கள் மீது புகார் கிளம்பிய சமயத்தில் பழனியப்பனின் சொத்துப்பட்டியல் என்று ஒரு பெரிய பட்டியல் வாட்ஸ் அப்பில் வெளிவந்து அதிர்ச்சிக் கிளப்பியது. பழனியப்பனின் சொந்த ஊரான மோளையானூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தியை செயல்படவிடாமல் ஆக்கியது, கிருஷ்ணமூர்த்தி பழனியப்பனை எதிர்த்து தலைமைச்செயலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தது என அவர் ஓரம்கட்டப்பட்டதற்கு அடுக்கடுக்கான காரணங்கள் சொல்லப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்,  தருமபுரியில் அ.தி.மு.க தோற்றதற்கு பழனியப்பனின் பதவிதான் பறிபோயிருக்க வேண்டும். ஆனால், தனது தந்திரத்தின் மூலம் அதில் கே.பி.முனுசாமியை சிக்க வைத்தார். இப்போது நடந்த விசாரணையில் எல்லாம் வெளிவந்துவிட்டதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தருமபுரியில் இருந்து கொண்டு  சென்னையில் உள்ள விருகம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு பணம் கட்டியிருக்கிறார். 'இத்தனை சின்னவயசுல இவ்வளவு பெரிய போஸ்ட்டிங்க் கொடுத்தா...  ச்சீட் பண்ணது மட்டுமில்லாம,  சென்னைக்கு வந்து இன்னும் பெரிய ஆளாக பாக்குறியோ..?' என்று ஜெயலலிதா பழனியப்பனுக்கு டோஸ்விட்டதாகவும் சொல்கிறார்கள்.

-எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ