Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசியக் கொடியை அவமரியாதை செய்தவருக்கு 'சீட்'!

சென்னை:  தேசியக் கொடியை அவமரியாதை செய்த பம்மல் சி.வி.இளங்கோவன், பல்லாவரம் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு,  பல்லாவரம் நகரமன்றத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி இளங்கோவன் கலந்துகொண்டு கொடி ஏற்றினார்.

அப்போது அவருக்கு மொபைலில் அழைப்பு வர,  தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில்,  தனது காதில் மொபைலை வைத்து பேசியபடியே கொடியை அவர் ஏற்றினர்.

இதுதொடர்பாக அவர் மீது புகாரும் தரப்பட்டது.

ஆனால் தற்போது அதிமுக வேட்பாளர் பட்டியலில் அவருக்கு பல்லாவரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது தொகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசியக்கொடியை அவமதித்தவருக்கு எம்.எல்.ஏ 'சீட்' பரிசா என இதை பிரசாரத்தின்போது எதிர்கட்சிகள் பேச திட்டமிட்டிருக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close