Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாய்ப்பளித்தது போதும் அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள்: பிரேமலதா

தேர்தல் தேதி அறிவிக்கபட்டு கூட்டணி முடிவுகள் எடுக்கபட்டப்பின் பல எதிர்பார்ப்புக்குபின் கேப்பட்டான் விஜயகாந்த் மக்கள் நல கோட்டணியில் இணைந்து இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் கடைசியான தேமு திக, மக்கள் நல கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொதுக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. முதலில் பேசிய  சுதீஷ் கேப்டனிடம் துரோகம் செய்தவர்களுக்கு இன்று அதிமுக பட்டியலில் சீட் வழங்கப்படவில்லை மே 20-ல்‌ கேப்டன் பதவி ஏற்பார் என்று பேசினார்.பிரேம்லதா பேசியது வேலூர் மாவட்டம் எனது சொந்த ஊர் அதனால் உங்களிடம் உரிமையோடு பேச வந்துள்ளேன். பாலாற்றில் தண்ணீரை நான் சிறு வயதில் பார்த்தது இன்று தண்ணீர் இல்லை எப்போது பார்ப்போம். இன்றும் அன்றும் ஆட்சி செய்த அரசு வேண்டாம் வேலூரில் சுகாதாரம், பாதாள சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் பல வருடமாக தீர்க்கபடவில்லை 2009 ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறவேற்றபடவில்லை காரணம் லஞ்சம். தமிழகத்தில் முதியோர் பென்ஷன் இதுவரை யாருக்கும் செல்லவில்லை. வெள்ளையனே வெளியேறு என்று காலம் மாறி இன்று கொல்லையனே வெளியேறு என கூறவேண்டிய நிலை அதிமுக, திமுக ஏற்படுத்தியுள்ளது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாய்ப்பளித்த நீங்கள் அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள். தி மு க தில்லுமுல்லு கட்சி ஆ தி மு க அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி ஆகும்

தே மு தி க மக்கள் நல கூட்டணியில் உள்ள தலைவர்கள் யார் மீதாவது குற்றசாட்டு உண்டா? விருதாசலம் ரிஷிவாத்தியம் தொகுதிக்கு சொந்த பணத்தில் மக்கள் பணியே கேப்டன் செய்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் காலை உணவு அளிக்கபடும் 100% சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கபட்டும் நம்மாழ்வார் திட்டம் போல் விவசாயம் மேம்படுத்த புதிய திட்டம் கொண்டுவரப்படும். ஒவ்வொரு பள்ளிகளில் தனி ஒரு கண்காணிப்பாளர் அமைத்து கல்விகட்டணம் மற்றும் பெண்கலுக்கு பாதுகாப்பௌ வழங்கப்படும். பெட்ரோல் 45 டீசல் 35 க்கு தர முடியும் டொல்கேட் கட்டணம் படியாக குறைக்கபடும் பொங்கலை ஒரு வாரகால அரசு சார்பாக ஜெல்லிகட்டோடு சேர்ந்து அரசு விழாவாக கொண்டாடப்படும். விளையாட்டு துறையே மேம்படுத்தி தமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்றுவோம். பேரிடர் மேலாண்மை அனைத்து மாவட்டங்களில் அமைக்கப்படும். பாலாற்றின் மணல் கொள்ளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும். மாற்று மணல் கொண்டுவரப்படும் சிறிய சிறிய துறைமுகம் விமானத்தளம் தரம் உயர்த்தப்படும்.ரமணா படத்தில் வரும் ஏசிஎஃப் போல யார் லஞ்சம் கேட்டாலும் உடனே தண்டனை வழங்கப்படும். அனைத்து கருவேல மரம் அழிக்கப்படும். 25 துறையே தேர்வு செய்து 25 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்டும் திருமணத்துக்கு 1 லட்சம் மற்றும் பொருட்களோடு திருமணம் ‌செய்யப்பட்டும். பெருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். கண்ணீர் அஞ்சலி போஸ்டர்க்கு யார் காரணம் என்றால் ஜெயலலிதா தான் டாஸ்மாக் பற்றி ஜெயலலிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏரி வேலைக்கு 450 நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும். நதிகள் இணக்கபடும் ஆ தி மு க வின் முதல்வர் வேட்பாளர் யார் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் குமாரசாமி தீர்ப்புக்கு தடை விதித்தால் ஜெயலலிதா உள்ளே போக வேண்டும். தி மு க வில் அனைவரும் ஜெயிலுக்கு போக வேண்டியவர்கள் தான் என்று கூறி முடித்தார்.

ம.சுமன். (மாணவ பத்திரிக்கையாளர்)
 படங்கள் ச.வெங்கடேசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close