Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திமுக மாய வலையில் வீழ்ந்து விடாதீர்கள்'- தேமுதிகவினருக்கு பிரேமலதா அட்வைஸ்

 

 

திமுகவுக்கு சென்றவர்களுக்கு சால்வை மட்டும் தான் மிஞ்சும். எனவே யாரும் மாய வலையில் வீழ்ந்து விடாதீர்கள் என்று தேமுதிகவினரை பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

தே.மு.தி.க தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமான பேச்சோடு சேலத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றதை கண்டித்து நடந்த கூட்டமாக இருந்தது.

கூட்டத்தில் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தே.மு.தி.க.வின் கொறடாவுமாகிய சந்திரகுமார், எங்கள் அண்ணியாரை அதிமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்படி என்ன பொய்யை சொல்லிவிட்டார் எங்கள் அண்ணியார். ஆடு கொடுத்தால் அம்மா கொடுக்க சொன்னார் என்கிறீர்கள். கிரைண்டர் கொடுத்தால் தலைவி கொடுக்க சொன்னதாக சொல்கிறீர்கள். இப்படி இலவசங்களை கொடுத்ததை அம்மா கொடுத்ததாக உரிமை கொண்டாடுகிறீர்கள்.

அப்படி பார்த்தால் இந்த ஆட்சியில் நடக்கும் அராஜகங்களுக்கும், ஊழலுக்கும் உங்கள் தலைவி தானே பொறுப்பாவார். அதைத்தானே எங்கள் அண்ணியார் கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. உங்கள் தலைவி இந்த ஊருக்கு வந்தால் நாங்கள் முற்றுகையிட எவ்வளவு நேரமாகும் என்றதோடு, கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய நிதி பத்து கோடிகளையும் இந்த தொகுதி மேம்பாட்டிற்காக பயண்படுத்தியிருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்காமல் கொடுத்திருக்கிறேன் என்றார்.

இறுதியாக மைக்கை பிடித்த பிரேமலதா, தமிழகம் முழுவதும் பேசுகிற வழக்கமான பேச்சையே பேசினார். ஈரோட்டை பற்றி பேசும் போது, தன்னை முழுமையாக பணி செய்ய விடாமல் தடுத்தது இந்த ஆட்சியாளர்கள் தான் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார் சந்திரகுமார். இந்த கூட்டணி தேர்தல் வரை தாங்காது என சொல்லியிருக்கிறார்கள். அவர்களை இந்த தமிழகத்தை விட்டே விரட்டும் கூட்டணி இதுதான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

தொடர்ந்து பேசும் போது, ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு மீடியா நபர் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்கிறார். அவரோ ஊழலில் திளைத்த அ.தி.மு.க, தி.மு.க.வை தவிர்த்து புது ஆட்களுக்கு தான் ஓட்டு போடுவேன் என்றார். அதற்கு அந்த மீடியா நண்பர் ஏன் என்கிறார். அப்போது, இவங்க ரெண்டு பேரும் திருடி பழக்கப்பட்டு போய்ட்டாங்க. அதனால ஆட்சிக்கு வந்தா உடனே திருட ஆரம்பிச்சிருவாங்க. புதுசா வர்ற ஆளுன்னா திருட கத்துக்கறதுக்கே மூனு வருசம் ஆயிரும். அடுத்து அவங்க திருட ஆரம்பிக்கிறதுக்குள்ள ஆட்சியே முடிஞ்சிரும். அதனால தான் அப்படி சொல்றேன்னு சொன்னார். அவர் ரொம்ப சிம்பிளா சொல்லிவிட்டார். ஆனால் அதுக்குள்ள எவ்வளவு அர்த்தம் இருக்கிறது.

எங்கள் கூட்டணி ஜெயித்தால் கேப்டன் தான் முதல்வர் என நாங்கள் உறுதியாக சொல்லுவோம். ஆனால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அப்படி சொல்ல முடியாது. இரண்டு பேருக்குமே தலைக்கு மேல் வழக்கு இருக்கிறது. விரைவில் விசாரணை வர இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்றவர், கடைசியாக எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலரை தி.மு.க.வினர் வளைக்கின்றார்கள். அங்கு சென்றவர்களுக்கு சால்வை மட்டும் தான் மிஞ்சும். எனவே யாரும் மாய வலையில் வீழ்ந்து விடாதீர்கள் என்றார்.

-வீ.மாணிக்கவாசகம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ