Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேப்டன் கட்சியை உடைத்த தி.மு.க...! - வெளியேறும் அடுத்த ஐந்து எம்.எல்.ஏக்கள்!

தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பத்து மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தே.மு.தி.க சட்டமன்றக் கொறடா சந்திரகுமார், மேட்டூர் எம்.எல்.ஏ பார்த்திபன், எம்.எல்.ஏ சேகர் உள்பட ஐந்து எம்.எல்.ஏக்கள், பத்து மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நலக் கூட்டணியோடு கேப்டன் இணைந்ததால், கட்சியின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும். தொடக்கத்தில் இருந்தே தி.மு.கவோடு கூட்டணி அமையும் என இவர்கள் நம்பி வந்தனர். மீண்டும் வெற்றி பெற்று வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கட்சித் தலைமையிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டவர்கள், இவர்களை ஒருபொருட்டாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, தே.மு.தி.கவில் இருந்து வெளியேறும் முடிவில் இவர்கள் உள்ளனர்.

இதனையடுத்து, சந்திரகுமார் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் தி.மு.கவில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சட்டமன்றத் தேர்தலில், நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க என தனி டீம் ஒன்று, தி.மு.க அணியில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அவர்கள். இந்தத் திடீர் தாக்குதலை தே.மு.தி.க தலைமை எதிர்பார்க்கவில்லை. சந்திரகுமார் அண்ட் கோவை சமரசப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டதாம்.

தி.மு.கவின் அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது.

ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close