Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் கூட்டணி முடிவு - தேமுதிக எம்எல்ஏக்கள் சொல்வது என்ன?

தொண்டர்களின் மனநிலை தி.மு.க கூட்டணி என்பதாகதான் இருந்தது என்று சந்திரகுமார் கூறியுள்ளதை மறுத்துள்ள தேமுதிக எம்எல்ஏக்கள், அனைவரின் முடிவுக்கு பிறகே விஜயகாந்த் கூட்டணி பற்றி அறிவித்தார் என்று தெரிவித்தனர்.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, அக்கட்சியின் கொள்கை பரபரப்பு செயலாரும், எம்எல்ஏவுமான சந்திரகுமார், எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சேலம் வடக்கு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ், "அனைவரின் முடிவுக்கு பிறகே விஜயகாந்த் கூட்டணி பற்றி அறிவித்தார். அதிருப்தியாளர்கள் விஜயகாந்துடன் இருந்தபோது ஏன் கருத்து கூறவில்லை. அணுக முடியாத இடத்தில் விஜயகாந்த் இல்லை. அதிருப்தியாளர்களால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மாவட்டச் செயலாளர்கள் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சுயலாபத்திற்காக விமர்சிக்கக் கூடாது" என்றார்.

கெங்கவல்லி சுபா எம்எல்ஏ கூறுகையில், "எங்களை அடையாளம் காட்டியதே புரட்சி கலைஞர்தான். விஜயகாந்தின் முடிவுக்குதான் நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். கட்சியை விட்டு தொண்டர்கள் யாரும் விலகவில்லை. கட்சி பலவீனப்படவில்லை. உன்னதமான தலைவருக்கு உண்மையாக இருப்போம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ