Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிகவில் இருந்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் அதிரடி நீக்கம்|

தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்களை அதிரடியாக நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
 

தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி தொடர்பாக  தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்களை கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணை செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம், (மாவட்ட கழக அவைத் தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்எல்ஏ, வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச் செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ