Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு, புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் அதிரடி மாற்றம்!

 

தமிழ்நாடு, புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் 10 பேரை அதிரடியாக மாற்றியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாரும், முதல்வருமான ஜெயலலிதா.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை,  கடந்த திங்கள் அன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அதிரடியாக ஜெயலலிதா மாற்றியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரஸ்வதி ரெங்கசாமி மாற்றப்பட்டு,  பி.சத்திய நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேட்டூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரசேகரனுக்கு பதிலாக செம்மலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுதாவுக்கு பதிலாக காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிகண்டனுக்கு பதிலாக முருகுமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பூம்புகார்  தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எ.நடராஜன் மாற்றப்பட்டு எஸ்.பவுன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேதாரண்யம்  தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரிதரனுக்கு பதிலாக ஓ.எஸ்.மணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் தொகுதி வேட்பாளராக நாஞ்சில் முருகேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி திருபுவனை- சங்கர்
திருநள்ளார் - முருகையன்
காரைக்கால் தெற்கு- கே.ஏ.யு.அசனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close