Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது விஜயகாந்த் அறிவிப்புதானா? சந்தேகம் கிளப்பும் அன்புமணி!

 தேமுதிக கட்சி நிர்வாகிகளை நீக்கி விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு அவருடையதுதானா என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி சந்தேகம் கிளப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்துள்ளது. விஜயகாந்தின் இந்த கூட்டணி முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் நேற்று போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்ளிட்ட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினார் விஜயகாந்த்.

இந்த நிலையில், தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பிரேமலதா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும், கட்சியில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது என்றும் சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் இன்று அதிரடியாக தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, தேமுதிக கட்சி நிர்வாகிகளை நீக்கி விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு அவருடையது தானா என்று சந்தேகம் கிளப்பினார்.

மேலும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்றும், கட்சிகளை உடைக்கும் தரக்குறைவான அரசியல்தான் தமிழகத்தில் நடக்கிறது என்றும் அவர்  தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close