Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் நீக்கம்- நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு வாய்ப்பு!

சென்னை,  பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளங்கோவனை நீக்கிவிட்டு,  நடிகை சி.ஆர்.சரஸ்வதியை வேட்பாளராக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், 227 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை கடந்த திங்கள் அன்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அறிவித்த கையோடு, பல வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஜெயலலிதா.

அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜா மாற்றப்பட்டு வைகைசெல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தியாகராயநகர், மன்னார்குடி, மேட்டூர், காட்டுமன்னார்கோவில், பூம்புகார், வேதாரண்யம் மற்றும் புதுச்சேரியில் திருபுவனை, திருநள்ளார், காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை அதிரடியாக மாற்றினார் ஜெயலலிதா.

இந்த நிலையில், சென்னை பல்லாவரம் தொகுதி வேட்பாளர் சி.வி.இளங்கோவன் மாற்றப்பட்டு நடிகை சி.ஆர்.சரஸ்வதியை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் மாற்றம்

மதுரை வடக்கு தாெகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியன் மாற்றப்பட்டு மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வேட்பாளர்கள் மாற்றம் தொடரும் என்பதால்,  அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் தற்போது 'கிலி'யில் உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close