Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூர் வேட்பாளரா நீங்க... சரத்குமாரை வறுத்தெடுத்த அனிதா!

 

திருச்செந்தூர் உனக்கு சரியான பாடத்தை தரும் என்றும், அதிமுக தொண்டன் உன்னை எப்படி ஏத்துக்குவான் என்றும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரை, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்து பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், "எப்படியாவது தளபதி முதலமைச்சராக வந்துவிடக் கூடாது, எப்படியாவது திமுக வந்திடக் கூடாது, இது எதற்கு தெரியுமா, அண்ணா திமுகவின் பி டீம்தான் வைகோ டீம். 1500 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு அவர் கட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு, இதை டிவியிலே கேட்டப்போ ஓடுறாரு, எல்லாரும் பாத்திருப்பீங்களே. இவர் லட்சணம், இவரு பேசுறாரு.

ஒரு வேட்பாளர் இப்போ அறிவிச்சிருங்காங்க. யப்பா... யப்பப்பா... பணத்துக்காக எதையும் விற்கக்கூடியவர் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வாரு. நான் ஏதாவது சொல்றேனு தப்பா எடுத்துக்கிடாதீங்க. அவர் பணத்துக்காக ஒரு ஆளை கல்யாணம் கெட்டிக்யிருக்காருனு நான் சொன்னேன்னு நீங்க நினைச்சிடக் கூடாது. அப்பேற்பட்டவர் இங்கு வேட்பாளராம். திருச்செந்தூர் இளிச்சவாய்....இல்ல. திருச்செந்தூர் உனக்கு சரியான பாடத்தை தரும். அதிமுக தொண்டன் உன்னை எப்படி ஏத்துக்குவான். நீ பிரதமராக போறேன், முதல்வராக போறேன், என்ன எச்சி இல்லையா போட்டுட்டாங்க, இலையா தூக்கி எறிஞ்சிட்டாங்கன்னெல்லாம் பேசினாயே... இப்பயென்ன கத்திரிக்காயா மாறிட்டியா" என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close