Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது தெரியுமா? (உத்தேச பட்டியல்)

சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிப் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றிவருவதாகவும்,  அதேசமயம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 23 உத்தேச தொகுதிகளின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, ராயபுரம், மயிலாப்பூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, ஆம்பூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆத்தூர், ஓசூர், தாராபுரம், காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், காரைக்குடி, பட்டுக்கோட்டை, கோபி, சிவகங்கை, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், நாங்குநேரி, கடலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close