Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி: புதிய தமிழகத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளும், ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டன. 

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று கூட்டணி தொடர்பாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், திமுக 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

முன்னதாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக பேராயர் எ.எம்.சின்னப்பா, தென்னிந்திய திருச்சபை சிஎஸ்ஐ-யின் சார்பாக துணைத் தலைவர் டாக்டர் பால் தாயானந்த், பெந்தேகோஸ் திருச்சபையின் சார்பாக துணைத் தலைவர் சார்லஸ் பின்னி ஜோசப், அட்வென்ட் திருச்சபை சார்பாக பிஷப் பால் அருள்தாஸ் ஆகிய அனைவரையும் கிறித்துவ நல்லிணக்க இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் ஒருங்கிணைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

- படம்: மீ.நிவேதன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ