Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்தா கைகளில் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது: மோடி தாக்கு!

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் கைகளில் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது என்று மம்தா பானர்ஜியை மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பிர்பரா என்ற இடத்தில் நடந்த பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அரசு ஒரு கூட்டத்தை கூட்டினால் அதில் தீதி (மம்தா பானர்ஜி) கலந்து கொள்வதில்லை. ஆமாம், அவர் என்ன மாதிரி முதல்வர்? அந்த கூட்டத்தை கூட்டுகிறவர் மோடி என்பதால்தான் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனால், அவர் எப்போது டெல்லி வந்தாலும், சோனியா காந்தியை சந்தித்து ஆசி பெறுகிறார்.

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது, முதலில் அதை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட இடதுசாரிகள் மீதுதான் பழி போட்டார். ஆனால், இடதுசாரிகளின் மரபுரிமையைத்தான் அவர் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து மாநிலத்தை மேலும் அழிவுக்கு வழி நடத்தி செல்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் கைகளில் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது. சாரதா சீட்டு மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை அவர் (மம்தா பானர்ஜி) காப்பாற்ற முயற்சித்தால், ஆட்சிக்கட்டிலில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்.

வளர்ச்சியைப்பற்றி பேசுவதை விட்டு விட்டு திரிணாமுல் காங்கிரசும், இடதுசாரிகளும் பாலியல் பலாத்காரம், ஊழல், வெடிகுண்டு தயாரிப்பு போன்றவற்றில் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் பழிபோடுவதில்தான் ஈடுபட்டுள்ளன. அதனால், இந்த முறை பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். பா.ஜ.க. எந்த மாநிலங்களில் எல்லாம் ஆளுகிறதோ, அங்கெல்லாம் வளர்ச்சிதான்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ