Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க.வால் மதவாத அபாயம் பெருகுகிறது... சோனியா குற்றச்சாட்டு!

சாருகேத்ரி: அஸ்ஸாமில், மதவாதத்தைப் பரப்பக் கூடிய நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதால், மாநிலம் முழுவதும் மதவாத அபாயம் பெருகி வருகிறது என்று சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உள்ள சாருகேத்ரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, ''அஸ்ஸாமில், மதவாதத்தைப் பரப்பக் கூடிய, சமூகத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் மதவாத அபாயம் பெருகி வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ நம்பிக்கை இல்லாத கட்சி பாரதிய ஜனதா கட்சி. இதன் காரணமாகவே, காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களில் அரசியல் சீர்குலைவை ஏற்படுத்த பா.ஜ.க. முயல்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு, பா.ஜ.க. செய்து வரும் மதவாத அரசியல், நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஆகும். பல்வேறு மதங்கள், ஜாதிகள், இனங்களையும் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி தீட்டி வருகிறது.

மறைந்த குருமார்களான சங்கரதேவர், அஸான் ஃபக்கீர் ஆகியோரின் போதனைகளைப் பின்பற்றுவதால், அஸ்ஸாம் மக்கள் நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்களும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மாநில மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்

பிரதமர் மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்களில் அனைவரையும் அரவணைத்து, இந்தியாவைப் பற்றிய பெரிய விஷயங்களைப் பேசுகிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, உள்நாட்டில், வெறுப்பு அரசியலையே கையாண்டு வருகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ