Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய தமிழகம் போட்டியிடும் 4 தனித் தொகுதிகள் விவரம் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு நான்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சி விரும்பிய 4 தொகுதிகளும்,  திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டதோடு, 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்த பேச்சுவார்த்தையை,   திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஓட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தனி தொகுதிகள் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி விரும்பிய 4 தொகுதிகளும் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலில் புதிய தமிழகம் போட்டியிடும் சின்னம் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதிகள் அறிவிப்பு

இதைத் தொடர்ந்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் சந்தித்து பேசினார். கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளை அடையாளம் காண்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத் தாெடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், மணப்பாறை, விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close