Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்- ஜெ. அதிரடி தொடரும்!

 

 

 

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றியுள்ளார். 6வது முறையாக இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அவர், மேலும் வேட்பாளர்கள் மாற்றம் தொடரும் என்கிறது அதிமுக வட்டாரம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை கடந்த 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அடுத்த நாளே அருப்புக்கோட்டை வேட்பாளரை மாற்றினார். இதைத் தொடர்ந்து 6ம் தேதி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நாளில் 12 வேட்பாளர்களை மாற்றினார்.

அதன்படி, தியாகராயநகர், மேட்டூர், மன்னார்குடி, காட்டுமன்னார்கோவில், பூம்புகார், வேதாரண்யம், நாகர்கோவில், புதுச்சேரியில் திருபுவனை, திருநள்ளார், காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். நேற்று பென்னாகரம், வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

இன்று மூன்று சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அதிரடியாக ஜெயலலிதா மாற்றியுள்ளார். அதன்படி, திருச்சி மேற்கு தெகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் எஸ்.தமிழரசி, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர்.மனோகரன், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ராதாபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.டி.லாரன்ஸ் மாற்றப்பட்டு இன்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

6வது முறையாக அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார். மேலும் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுவதால் அச்சத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close