Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நேரத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள் திறப்பு: எல்லாம் ஜெயலலிதா ராசிப்படி தானாம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, எந்த காரியமாக இருந்தாலும் தனது ராசி மற்றும் ஜோசியர்களின் ஆலோசனைப்படித்தான் நடந்து கொள்வார். தேர்தல் பிரசாரமாகட்டும், வேட்பு மனு தாக்கலாகட்டும் எல்லாம் ஜோசியர்களின் ஆலோனைகள்படிதான்.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அதே நேரம், ஜோசியர்களின் ஆலோசனையின்படி இன்று 9-ம் தேதி சென்னையில் தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா தொடங்குகிறார்.

மேலும், தனது ராசிப்படி தேர்தல் பிரசார மேடை அமைப்பு வடக்கு அல்லது தெற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் பிரசார மேடைகள் வடக்கு மற்றும் தெற்கு நோக்கி அமைக்கும்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது ஜெயலலிதா பங்கேற்று பேச உள்ள பிரசார மேடைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வேண்டும். இன்றே தேர்தல் பிரசாரத்தையும் தொடக்கிவிட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஜோசியர்கள் நேரம் குறித்து கொடுத்து ஆலோசனைகளையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும், தேர்தல் அலுவலகம் திறப்பு மற்றும் இன்றைக்கே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில், அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று,  மக்ககளை சந்தித்து வாக்குகள் சேகரித்து, தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

சென்னை, ராயபுரத்திலும் அக்கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து, மக்களிடம் பிரசாரத்தை தொடங்கினார்.
 


வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி, வேளச்சேரி 100 அடி சாலையில் தேர்தல் அலுவலகத்தை இன்று காலை திறந்து வைத்தார். அலுவலகம் திறப்புக்கு முன்பாக அங்கிருந்த ஶ்ரீவேதாந்த ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் சாமி கும்பிட்டார். தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் வாக்கு சேகரிப்பு தொடர்பாகவும், தேர்தல் பணி தொடர்பாகவும் பேசினார். இதைத் தொடந்து வாக்காளர்களிடம் பிளாஸ்டிக்கினால் ஆன இரட்டை இலைச்சின்னத்தைக் காட்டி வாக்குகளைச் சேகரிக்கத் தொடங்கினார்.

- எம்.கார்த்தி, எம்.செய்யது

படங்கள்: விகடன் குழு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close