Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திருச்செந்தூரை வளமிக்க தொகுதியாக மாற்றுவேன்'- சரத்குமார் பிரசார முழக்கம்!

திதிருச்செந்தூரில் இன்று பிரசாரத்தை தொடங்கிய சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியை வளமிக்கதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியில் அக்கட்சிக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரட்டை இலை சின்னத்திலேயே சரத்குமார் இங்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று திருச்செந்தூரில் தொடங்கினார்.

முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தனது மனைவி ராதிகாவுடன் சாமி தரிசனம் செய்தார்.  பின்னர் திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தை கோயில் சன்னதி தெருவில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. - ச.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சி தொடர்வதற்காக அ.தி.மு.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.  திருச்செந்தூர் தொகுதியை வளமிக்கதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என்றார்.

பின்னர் அவர் நான்கு ரதவீதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

படம்: ஏ.சிதம்பரம்



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ