Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்துடன் ஜி.கே. வாசன் சந்திப்பு- முடிவுக்கு வந்தது தொகுதிப் பங்கீடு!

 

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை, சந்தித்து பேசிய நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு தமாகாவை தொடங்கிய ஜி.கே.வாசன், யாருடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்யாமல் இருந்து வந்தார். கூட்டணிக்கு வருமாறு வாசனை நேரில் சந்தித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் வாசன் எந்தவித இசைவும் கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி கூட்டணி அமைத்தது.



கார்டனில் இருந்து அழைப்புக்காக வாசன் காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் கார்டனில் இருந்து வாசனுக்கு திடீரென அழைப்பு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் அதிருப்தி அடைந்தார் வாசன்.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்த நிலையில், வாசனும் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணியில் சேருவது என முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஜி.கே.வாசனை, மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ஜி.கே.வாசன் மற்றும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை விஜயகாந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்தார் ஜி.கே.வாசன்.
 

படம்- ஆ.முத்துக்குமார், ப.சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ