Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க-வின் பிரசார வியூகங்கள் என்ன தெரியுமா?

ரு பக்கம் மாற்றம் முன்னேற்றம் என்று ஆரம்பித்தது பாமக. மேடைகளில் காலர் மைக்குடன் நடந்தபடி பேசி, டிஜிட்டல் யுக இளைஞர்களைக் குறிவைக்கிறார் அன்புமணி. திடீரென்று எல்லா நாளிதழ்களிலும் முதல்பக்க விளம்பரங்களுடன் களமிறங்கியது திமுக. ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா,’ ஆலுமா டோலுமா என்று நாளிதழ்கள், போஸ்டர்கள், யூ ட்யூப்பில் விளம்பரங்கள் கொட்ட, இப்போது திமுகவின் விளம்பரப்பாடல்கள் வேறு வலம் வந்துகொண்டிருக்கிறது. முகநூலில் எங்களுக்கு ஆதரவாகப் பதிவு எழுதினால் பணம் என்கிறார்கள்.

ஆனால், ஆளுங்கட்சியான அதிமுகவோ, இதுவரை பெரிய விளம்பரங்கள் எதுவும் செய்யவில்லை. ஊர் ஊருக்கு மேடை போட்டு அதிமுக ஆதரவு நடிகர்கள் முழங்கிக் கொண்டிருக்க, பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார் ஜெயலலிதா. எல்லாமே பழைய பாணி.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டால், அதன்பிறகு செய்கிற விளம்பரங்களெல்லாம் அந்த வேட்பாளரின் செலவுக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், தொகுதிக்குள் அடிக்கப்படும் பிட் நோட்டீஸில்கூட எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பிரதி அனுப்ப வேண்டும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.

அப்படியானால், புதுமையாக ஒன்றுமே செய்யப்போவதில்லையா அதிமுக என்று ஆராய்ந்ததில், ‘அப்படியெல்லாம் இல்லையே’ என்ற பதிலே அக்கட்சி தரப்பிலிருந்து வந்தது.

“நாங்க செஞ்ச சாதனையே எங்களுக்கு விளம்பரம்தான். அதைவிட வேறென்ன விளம்பரம் வேண்டும்’ என்கிற ரத்தத்தின் ரத்தம் ஒருவர், " அம்மான்னா சும்மாவா...விளம்பர ஃபீல்ட்ல டாக்டரேட் வாங்கினவங்கள்லாம் டீம்ல இருக்காங்க. 234 ப்ராடக்ஸ் இறங்குது. அநேகமா நாளையில் இருந்து ஒவ்வொண்ணா வரலாம். 2 D அனிமேஷன் விளம்பரங்கள், எக்கச்சக்கமான வீடியோக்கள்னு எல்லாம் தயார்.

யாரையும் திட்ட வேண்டாம். நம்ம பண்ணின சாதனைகளை சொன்னாலே போதும்கறதுதான் அம்மாவோட உத்தரவு. இன்னொண்ணு, தமிழ்நாட்டுல 7 லட்சம் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் இருக்காங்க. அவங்களுக்காக தமிழ், ஆங்கிலம் இல்லாம தெலுங்குலேயும்  விளம்பரங்கள் வரப்போகுது. கேரளாவுக்காக சில விளம்பரங்கள்
மலையாளத்துலயும் வரும். டிஜிட்டலா என்னென்ன பண்ணணுமோ எல்லாமே யோசிச்சுட்டிருக்காங்க” என்கிறார்.

ஜெயலலிதா, கோவை மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே, திருச்சியில் ஹோலோக்ராஃபிக் முறையில் விர்ச்சுவலாக உங்கள் முன் பேசிக்கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படாதீர்கள்.

-சத்ரியன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ