Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த.மா.கா.வை உடைத்த தி.மு.க.: சலசலக்கும் மக்கள் நலக்கூட்டணி!

க்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணைந்ததையடுத்து தீவிர பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் ஜி.கே.வாசன். இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த முடிவை எதிர்த்து த.மா.கா.வின் மூத்த தலைவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாக உள்ளனர். இதனால், அதிர்ந்து போய் இருக்கிறது த.மா.கா. கூடாரம்.

மக்கள் நலக் கூட்டணியில் 26 இடங்களை த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், ஜி.கே.வாசனை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பை த.மா.கா.வின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் புறக்கணித்தனர். புறக்கணிப்பிற்கு வைகோ இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க முடியாது என காரணத்தை வாசனிடம் தெரிவித்திருந்தனர். மேலும், கூட்டணிக்கு அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என வாசன் முடிவு எடுத்தபோதே, தி.மு.க. கூட்டணி நமக்கு சரியாக இருக்கும் என பல வகைகளில் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாம் இருந்தால் நமக்கு மரியாதை இருக்காது என வாசன் மறுத்து விட்டார்.

இந்நிலையில், த.மா.கா.வின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் விஸ்வநாதன், ராசிபுரம் ராணி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாம் வெற்றிபெற முடியாது. த.மா.கா.வை கேப்டனிடம் அடகு வைத்து விட்டார் வாசன். எனவே, காங்கிரஸ் கட்சியில் சேர்வது மட்டுமே எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும் என்ற காரணத்தை அதிருப்தியாளர்கள் முன் வைக்கின்றனர்.

இதையடுத்து, நாளை (10-ம் தேதி) இந்த தலைவர்கள் சோனியாகாந்தியை சந்திக்கின்றனர். எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இவர்கள் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து மெகா அலையன்ஸ் என்ற பெயரில் தேரர்தலை சந்திக்க இருக்கிறார் வாசன். இந்நிலையில், கூட்டணி உருவாகி சில மணி நேரங்களில் த.மா.கா.வே உடையும் அளவுக்கு தி.மு.க.வினர் வேலை பார்ப்பார்கள் என வாசன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. போகிறவர்கள் போகட்டும். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பீட்டர் அல்போன்சின் அதிரடியைத் தொடர்ந்து இன்னும் சில முக்கிய தலைவர்களும் காங்கிரசோடு செல்ல இருக்கிறார்கள். இந்த அதிரடியால் மக்கள் நலக் கூட்டணி கலகலத்து கிடக்கிறது.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close