Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.கே.வாசனை தவிர யார் வந்தாலும் வரவேற்போம்- ஈவிகேஎஸ்

 

ஜி.கே.வாசனை தவிர த.மா.கா.வினர் யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி,  காங்கிரஸ் சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடுவேன் எனவும், இல்லையெனில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக-விடம் அரவக்குறிச்சி தொகுதியை கேட்டுப் பெற தவறி விட்டதாகவும், எனவே அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை,  கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று காலை சந்தித்துப் பேசினார். த.மா.கா.வில் இருந்து பலர் விலகி காங்கிரசில் சேர இருப்பது பற்றி இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமாகாவில் இருந்து பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளனர். ஜி.கே.வாசனைத் தவிர த.மா.கா.வினர் யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கும்.

மதவெறி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.வாசன்,  காங்கிரசுக்கு திரும்ப லாயக்கற்றவர். அதிருப்தி தமாகாவினருக்காக கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கோரும் எண்ணம் இல்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பட்டியலிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ