Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும்?

சென்னை: மக்கள் தேமுதிக அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய நிலையில், திமுக கூட்டணியில் அந்த அமைப்புக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

சந்திரகுமார் தலைமையிலான தே.மு.தி.க. அதிருப்தி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்ட முடிவில் ‘மக்கள் தே.மு.தி.க.’ எனும் புதிய இயக்கம் தொடங்கப்படுவதாக சந்திரகுமார் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

''அதிமுக. அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எனவே தேமுதிக-திமுக. கூட்டணி உருவாக ஆசைப்பட்டோம். மக்கள் தேமுதி. இயக்கத்தில் நாங்கள் 10 பேருமே பொறுப்பாளர்கள்தான். அதிமுக அரசை அகற்ற திமுக சார்பில் அழைப்பு வந்தால்,  நிச்சயம் அக்கட்சி தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசுவோம். வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவோம்" என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை  சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்களது மக்கள் தேமுதிக ஆதரவளிப்பதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

திமுக கூட்டணியில் உங்களுக்கு 'சீட்' ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு, எவ்வித நிபந்தனையையும் விதித்து திமுகவுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

மேலும், "  உங்களை நம்பி வந்துள்ளோம் என்று கருணாநிதியிடம் கூறினோம். அதற்கு கடை நேரத்தில் வந்துள்ளீர்களே என அவர் கூறினார். நாங்கள் சில தொகுதிகளை கேட்டுள்ளோம். அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்" என சந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் இவ்வாறு கூறினாலும், திமுக கூட்டணியில் மக்கள் தே.மு.தி.கவுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ