Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க. கூட்டணியில் ஐ.ஜே.கே.-45, இ.ம.க.மு.க.வுக்கு‌ 24 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐ.ஜே.கே.) 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு‌ 24 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணியை பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான உடன்பாட்டில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ஐ.ஜே.கே. தலைவர் கோவைத் தம்பியும் கையெழுத்திட்டனர். இதேபோல், தேவநாதனின் இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு‌ 24 தொகுதிகளை பா.ஜ.க. ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐ.ஜே.கே.) கோவில்பட்டி, மதுரை வடக்கு, நத்தம், வேடசந்தூர், திருப்பத்தூர், சிவகங்கை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி‌‌, அறந்தாங்கி, திருச்சி மேற்கு, லால்குடி, முசிறி, துறையூர் , அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குன்னம், அரியலூர், திருவையாறு, நன்னிலம், பூம்புகார்‌, திட்டக்குடி , விருத்தாசலம், நெய்வேலி, மயிலம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரவாயல், திரு.வி.க.நகர் , காட்பாடி, குடியாத்தம் , கலசப்பாக்கம், வந்தவாசி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, சேலம் மேற்கு, ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 45 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு, நாங்குனேரி, சங்கரன்கோவில் , பழனி, திருமயம், திருவாடானை, ஒரத்தநாடு, கீழ்வேலூர், பண்ருட்டி, புவனகிரி, திருக்கோயிலூர், சோழிங்கநல்லூர், உத்திரமேரூர், அம்பத்தூர், சோளிங்கர், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, செங்கம்,, திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பர்கூர், மடத்துக்குளம் ஆகிய 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு குளித்தலை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தொகுதி உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க. கூ.ட்டணியில் இருந்து விலகுவதாக புதிய நீதிக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ