Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறிபோனது 2 உயிர்- கட்சித் தலைவர்களே நீங்கள் இப்படி செய்யலாமா?

 

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும் இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கடுமையான அனல் வீசும் வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் பிரசாரத்திற்கு போகும் நேரம் பகல்வேளையாக இருந்தால், அப்பாவி மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்பதற்கு நேற்றைய தினம் சம்பவமே உதாரணம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலிச்சகுடி கிராமத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். வெயில் கொடுமை, தண்ணீர் தாகம், இயற்கை உபாதை கழிக்க வழியில்லாது...என்று தவித்துப்போன கூட்டத்தினர் முண்டியடித்துக் கொண்டு வெளியேற, நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது, ஜெயலலிதா விழா மேடையில்தான் இருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களை காலை 9 மணிக்கே அழைத்துவந்து இருக்கையில் அமர வைத்திருக்கிறார்கள். மாலை 3 மணிக்குத்தான் ஜெயலலிதா மேடைக்கு வந்திருக்கிறார். 4 மணியளவில் பேச்சை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். இந்த இடைப்பட்ட 7 மணி நேரத்தில் பார்வையாளர்கள் வரிசையில் நெருக்கமாக உட்காரவைக்கப்பட்டிருந்த மக்களை போலீஸார் எங்கும் நகர விடவில்லை.

பட்டை சாதம், வாட்டர் பாட்டில் என்று மக்களுக்கு அ.தி.மு.க-வினர் வினியோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை போதுமானதாக இல்லை. இனியாவது, தலைவர்கள் பிரசாரத்திற்கு போகும்போது, காலை அல்லது மாலை நேரத்தை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும். அத்தோடு, இந்த வெயில் சீஷனில் பல மணி நேரங்களுக்கு முன்பே கொட்டடியில் ஆடு, மாடுகளை அடைப்பது போல், தலைவர்கள் வருகைக்கு பல மணி நேரம் முன்பே, பொதுமக்களை தேர்தல் பிரசார மைதானத்தில் அடைத்து வைப்பதையும் கைவிட வேண்டும். இதை கண்டுகொள்ளாமல் அரசியல் கட்சிகள் செயல்பட்டால், மேலும் பல உயிர்களை பறிகொடுக்க வேண்டிவரும்.

-ஆர்.பி.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ