Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுகவிடம் சந்திரகுமார் தேர்தலில் வாய்ப்பு கேட்பது இதற்காகத்தானாம்!

மக்கள் தேமுதிகவிற்கு அங்கீகாரம் வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட திமுகவிடம் வாய்ப்பு கேட்டுள்ளோம் என்று அக்கட்சித் தலைவர் சந்திரகுமார் கூறினார்.

தேமுதிக,  மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட அக்கட்சி பிரமுகர்கள் சிலர் விஜயகாந்த்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து சந்திரகுமார், இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட 4 மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து சந்திரகுமார், கடந்த 10- ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

இந்த நிலையில், மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்தார். 
 

இதைத் தொடர்ந்து சந்திரகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் மற்றும் ஏழு மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து,  வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், "சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் திமுகவை ஆதரிக்கவில்லை. திமுகவுடன், மக்கள் தேமுதிக இணைந்து போட்டியிடுவதன் அவசியம் குறித்து ஸ்டாலினுடன் பேசினோம். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதியிடம் பேசி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்கள் தேமுதிகவிற்கு அங்கீகாரம் வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் செயல்பாடுகளை கொண்டே தேமுதிக யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்"  என்றார்.
 

பொன்குமாருக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு

இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமாருக்கு,  பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசிய பொன்குமாரிடம் தொகுதி பங்கீட்டுக்கான பட்டியல் வழங்கப்பட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close