Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2.91 லட்சம் புகார், ரூ.21.85 கோடி ரொக்கம் பறிமுதல்- இது தேர்தல் ஆணையத்தின் தகவல்!

 

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பெறப்பட்ட 2.91 லட்சம் புகார்களில் 2.83 லட்சம் புகார்களுக்கான விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.21.85 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில், தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, 12.3.16 வரை அரசு மற்றும் பொது சொத்துகளில் சுவர் விளம்பரம் செய்ததாக 61,544 புகார்களும், போஸ்டர் ஒட்டியதாக  87,381 புகார்களும், பேனர் வைத்தாக 28,852 புகார்களும் உட்பட மொத்தம் 2,08,878 புகார்கள் பெறப்பட்டதில் 2,05,314 புகார்கள் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இதுபோல தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக 29,588 புகார்களும், போஸ்டர் ஒட்டியதாக 37,007 புகார்களும், பேனர் வைத்தாக 5,856 புகார்கள் உட்பட மொத்தம் 82,826 புகார்களில் 77,893 புகார்களுக்கான விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக (MCC-1) 1277 வழக்குகளும், வாகனங்களில் அனுமதியில்லாமல் விளம்பரம் மேற்கொண்டதா (MCC-1A) மொத்தம் 1028 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

பறக்கும் படையினர் 10.4.16 அன்று சோதனை மேற்கொண்டபோது பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் ரூ.10,57,050 ரொக்கமும் 695 சுவர் கடிகாரங்கள், 500 டீ ஷர்ட்கள், மதுவகைகள் போன்றவையும் 11.4.2016 அன்று சோதனை மேற்கொண்டபோது ரூ.1,64,420 ரொக்கமும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் 10.4.16 அன்று சோதனைகள் மேற்கொண்டபோது ரூ.12,41,167 ரொக்கமும், 150 அசிசி மூட்டைகளும், 11.4.16 அன்று சோதனையின் போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளும், 90 அரிசி மூட்டைகளும், ரூ.4.79 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன. 11.4.16 வரை நிலையான கண்காணிப்புக் குழுவினர் மூலம் ரூ.12,95,17,921 ரொக்கமும், பறக்கும் படையினர் மூலம் ரூ.8,90,17,620 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ