Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்- குஷ்பு அதிரடி

காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால்,  ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஜெயலலிதா போட்டியிடும் அ.தி.மு.க. தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி, தி.மு.க.விடம் இருந்து காங்கிரசுக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் பரபரப்பாக கூறப்பட்டது.

அதாவது, ஜெயலலிதாவை எதிர்த்து நடிகை குஷ்பு போட்டியிட இருப்பதாக தெரிகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என்று நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார். என்றாலும், அதன் பிறகுதான் இதுபோன்ற ஒரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆர்.கே. நகர் தொகுதியை தி.மு.க. வைத்துக்கொள்கிறதா அல்லது காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறதா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ