Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அரசியல் தவறை திருத்திக் கொண்டேன்'- காங்கிரசில் இணைந்த பீட்டர் தடாலடி!

தமாகாவில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும், தாங்கள் செய்த அரசியல் தவறுகளை இன்று திருத்திக் கொண்டுள்ளோம் என்றும் அவர்கள்  தெரிவித்தனர்.

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் தமாகா கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின்  முன்னணி நிர்வாகிகளாக இருந்த பீட்டர் அல்போன்ஸ், விஸ்வாதன் உள்ளிட்ட சிலர் விலகினர்.

இந்த நிலையில், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள்  சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்னிலையில் இன்று  காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

மேலும், த.மா.காவின் சிறுபான்மை அணி தலைவர் அமீர்கான் உள்ளிட்ட அந்த அணியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்ந்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், நான் ஒரே நிமிடம்தான் பேசப்போகிறேன். இந்த மேடையை பார்த்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு செய்தி சென்றடைந்திருக்கும். நாங்கள் செய்த அரசியல் தவறுகளை இன்று திருத்திக் கொண்டுள்ளோம்" என்று கூறிவிட்டு தமாகாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்களின் பட்டியலை படித்தார்.

இதையடுத்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "தேசிய உணர்வு உள்ளவர்கள் காங்கிரசில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

ப.சிதம்பரம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. லட்சியத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியினர் ஒன்றாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

படம்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ