Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துரோகம் செய்த பொன்னு பாண்டியனை மக்கள் தண்டிப்பார்கள்: முத்தரசன்

சென்னை: தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்து அ.தி.மு.வில் இணைந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்னு பாண்டியனை மக்கள் தண்டிப்பார்கள் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்,  அ.தி.மு.க. கூட்டணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்னு பாண்டியன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னு பாண்டியன், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.முத்தரசன் தனது முகநூலில், ''ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன்னு பாண்டியன் மீது தொடர்ந்து கடுமையான புகார்கள் கட்சித் தலைமைக்கு வந்துள்ளன. இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள இருந்த நிலையில் அவர் கடந்த (09.04.2016) அன்று அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் இத்தகையவர்களுக்கு பொருத்தமான இடமாக அ.இ.அ.தி.மு.க. விளங்குவது வியப்பளிக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கும். கட்சிக்கும், நம்பகத்தன்மைக்கும் துரோகம் செய்த இவரை மக்கள் தண்டிப்பார்கள்" என்று பதிவிட்டு உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ