Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா? ராமதாஸ் ட்விட்

தி.மு.க. அணியில் மக்கள் தே.மு.தி.கவுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா? என்று ட்விட் செய்துள்ளார்.

மேலும், போக்குவரத்து ஆணையர் ஆட்டோவில் சென்றால்தான் மக்கள் அவதி புரியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு, 'முதலமைச்சருக்கும் இந்த யோசனையை சொல்லுங்க! என்று ட்விட் செய்துள்ளார்.

கூட்டத்துக்கு வந்த தொண்டர் வீடு திரும்பும்போது உடல் நலக்குறைவால் மரணம் என்று ஜெயலலிதா கூறியதற்கு, 'அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்சில்தான் வீடு திரும்புவரோ? ' என்று ராமதாஸ் ட்விட் செய்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் நெரிசலில் இறக்கவில்லை, நோயால் இறந்தனர் என ஜெயலலிதா கூறியதற்கு, 'இரட்டை இலையையே பறக்கும் குதிரையின் றெக்கைன்னு சொன்னவர்தானே நீங்க?' என்று கிண்டல் அடித்துள்ளார் ராமதாஸ்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close