Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாமக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குரு போட்டி!

 

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும்  72 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாமக இன்று வெளியிட்டுள்ளது. ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குரு போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 45 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 72 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

2வது கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:

1) ஜெயங்கொண்டம் - ஜெ.குரு
2) அரியலூர் - க.திருமாவளவன்
3) குன்னம் - க.வைத்திலிங்கம்
4) எழும்பூர் (தனி) - மா.கீதாரமணி
5) வால்பாறை (தனி) - உ.சிங்காரவேலு
6) காட்டுமன்னார்கோவில் (தனி)- டாக்டர் அ.அன்புசோழன்
7) நெய்வேலி - கோ-ஜெகன்
8) சிதம்பரம் -இரா.அருள்
9) நிலக்கோட்டை (தனி) - நா.ராமமூர்த்தி
10) பவானிசாகர் (தனி)- என்.ஆர்.வடிவேல்

11) பெருந்துறை - பு.குமரேசன்
12) குளச்சல் - அ.அலெக்சாண்டர் ராஜ்குமார்
13) விளவன்கோடு - ஆர்.அரிகரன்
14) கிள்ளியூர் - செ.அலெக்சாண்டர்
15) கிருஷ்ணகிரி - எஸ்.குமார்
16) கிருஷ்ணராயபுரம்- மூ.பாண்டியன்
17) செய்யூர் (தனி) - ப.மோகன்
18) பல்லாவரம் - ஆர்.வெங்கடேசன்
19) காஞ்சிபுரம்- பெ.மகேஷ்குமார்
20) உத்திரமேரூர் - பொன்.கங்காதரன்

21) திருப்போரூர்- பி.வி.கே.வாசு
22) மதுரை தெற்கு - செ.மாரிச்செல்வம்
23) உசிலம்பட்டி - த.முருகன்
24) திருப்பரங்குன்றம்- சு.பாலமுருகன்
25) திருமங்கலம்- த.கண்ணையா
26) சோழவந்தான் (தனி) - சோ.முத்தையா
27) கீழ்வேளூர் (தனி) - எ.வனிதா
28) வேதாரண்யம் - க.உஷா கண்ணன்
29) பரமத்திவேலூர்- பொ.ரமேஷ்
30) கூடலூர் (தனி) - இரா.முருகேஷ்

31) அறந்தாங்கி - கே.செல்வம்
32) திருமயம்- ஆ.சுரேஷ்
33) கெங்கவல்லி (தனி) - அ.சண்முகவேல் மூர்த்தி
34) ஏற்காடு (தனி) - இரா.செல்வம்
35) சங்ககிரி - பெ.கண்ணன் (எ) கண்ணையன்
36) சேலம் வடக்கு - கதிர்.ராசரத்தினம்
37) வீரபாண்டி - ஏ.ஆர்.பி.சாம்ராஜ்
38) மானாமதுரை (தனி)- ஆர்.மலைச்சாமி
39) துறையூர் (தனி) - அ.கனகா
40) மணப்பாறை - அ.லீமா சிவக்குமார்

41) திருவெறும்பூர் - பி.கே.திலீப்குமார்
42) கீழ்பெண்ணாத்தூர்- கோ.எதிராெலிமணியன்
43) ஆரணி - சு.ராஜசேகர்
44) போளூர்- ஆ.வேலாயுதம்
45) செய்யாறு - க.சீனிவாசன்
46) மடத்துக்குளம் - அ.ரவிச்சந்திரன்
47) தாராபுரம் (தனி)- கி.மாதவன்
48) பல்லடம் - சி.வடிவேல்
49) மாதவரம்- கோ.இரவிராஜ்
50) அம்பத்தூர்- கே.என்.சேகர்

51) கும்மிடிப்பூண்டி - மா.செல்வராஜ்
52) திருவொற்றியூர்- ர.வசந்தகுமாரி
53) கும்பகோணம்- கே.ஆர்.வெங்கட்ராமன்
54) திருத்துறைபூண்டி (தனி) - உ.காசிநாதன்
55) பாளையங்கோட்டை- ச.நிஸ்தார் அலி
56) தென்காசி - பெ.சீதாராமன்
57) ஆலங்குளம்- பொ.குணசேகரன்
58) அம்பாசமுத்திரம்- இரா.அன்பழகன்
59) தூத்துக்குடி- அ.சேசையா பர்னாந்து
60) ஸ்ரீவைகுண்டம் -ஜி.லிங்கராஜ்

61) விளாத்திகுளம்- கே.சீனிவாசராமானுஜம்
62) ஆண்டிப்பட்டி - க.இரவி
63) காட்பாடி- என்.டி.சண்முகம்
64) வேலூர் - துரை.லட்சுமி நாராயணன்
65) ஆம்பூர்- எம்.அமீன் பாட்ஷா
66) கள்ளக்குறிச்சி (தனி)- இரா.செந்தமிழ்ச்செல்வி
67) திண்டிவனம் (தனி) - ஆ.காளிதாஸ்
68) ரிஷிவந்தியம் - கே.பி.பாண்டியன்
69) சங்காரபுரம்- எஸ்.சிவராமன்
70) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- வே.வெள்ளைச்சாமி
71) சாத்தூர் -மு.பாலகிருஷ்ணன்
72) ராஜபாளையம் - பெ.லட்சுமணன்

இதுவரை 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close