Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனித்துப்போட்டி: வேட்பாளர்களை அறிவித்தது எஸ்.டி.பி.ஐ. கட்சி!

திமுகவில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராமல் இருக்கும்போதே, பேச்சு வார்த்தையை பாதியில் முடித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்னர் எஸ்.டி.பி.ஐ. கட்சி  அங்கிருந்து வெளியேறியது.

திமுக கூட்டணியில் கதவை அடைத்தார்களா அல்லது இவர்களே கதவை சாத்தினார்களா என்று தெரியாத சூழ்நிலையில்,  இன்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம்,  சென்னை முத்தமிழ் நகரில் இன்று (13.04.2016) மாலை நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில்  தமிழகத்தில் 50 தொகுதிகளிலும், புதுவையில் 3 தொகுதிகளிலும்  தனித்து போட்டியிடுவது என்று முடிவானது. முதற்கட்டமாக தமிழகத்தின் 25 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்  அப்போது, அறிவிக்கப்பட்டது.

சென்னையில் ராயபுரம், துறைமுகம், தாம்பரம், திருவிக நகர் ஆகியன எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் முக்கிய தொகுதிகள் ஆகும்.

அதிமுகவின் கதவடைப்பால்,  மனம் நொந்து போன வலசை ரவிச்சந்திரனின் அ.ம.கட்சி, ம.ந.கூ.வில் இருக்கும் ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி,  ம.ந.கூ. அணியில் கலக்க இதற்கு முன்னரே முயற்சித்தது.

'இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால்  தனியாக தொகுதிகளை கொடுக்க முடியாது. முடிந்தால் ஆதரவு மட்டும் கொடுங்கள்' என எஸ்.டி.பி.ஐ.க்கு,  ம.ந.கூ. கை விரித்து விட்டதாம்.

அ.ம.க.வுக்கும் அதே பதில் சொல்லப்படவே, அந்த கட்சியோ, ' ம.ந.கூ.வில் இருக்கும் த.மா.கா.வுக்கு ஆதரவளிக்கிறோம்' என்று ஆதரவிலும் உள் ஒதுக்கீடு போல ஒரு வித்தியாசமான ஆதரவை  கொடுத்துள்ளது

வேல்முருகனின் த.வா.க, ஜான்பாண்டியனின் த.ம.மு.க. , ஈஸ்வரனின் கொ.ம.தே.க. போன்ற கட்சிகளை  அவர்கள் எதிர்பார்த்த பிரதான கட்சிகள், கூட்டணிக்குள் சேர்க்க மறுத்து விட்டதால்  அந்தக் கட்சிகள் தவித்துக் கொண்டிருக்கின்றன.

எஸ்.டி.பி.ஐ. கட்சி போல இவர்களும் "ஆகட்டும் பார்க்கலாம்" என்று தங்களுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அடுத்து வருகிற நாட்களில் அறிவிப்பார்களா அல்லது அப்படியே சத்தமில்லாமல்  இந்த ஐந்தாண்டு ஓய்வாண்டு என்ற இருக்கப்போகிறார்களா தெரியவில்லை.

-ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close