Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் நலக் கூட்டணி ஊழலற்ற ஆட்சி அமைக்கும்:ஜி.கே.வாசன்!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, ஊழலற்ற ஆட்சியை அமைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது. ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் மோகன், சத்தியராஜ், ஜெயராமன், தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், மயிலை தாரா உள்பட அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 100 பேர் தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில்,

"தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 21அல்லது 22ம் தேதி வெளியிடப்படும். தேமுதிக -தமாகா - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறேன். அந்த பிரசார பயணம் வருகிற மே 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன். மக்கள் நலக் கூட்டணி ஊழலற்ற ஆட்சி அமைக்கும்.

மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன். கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து எற்படவில்லை. மேலும் தேர்தல் நெருங்குவதாலும், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தோம். கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எங்களது கட்சிக்கு 26 தொகுதிகள்தான் கிடைத்தது. முன் கூட்டியே சேர்ந்திருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்து இருக்கும்." என்று கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close