Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழனிமாணிக்கம் தம்பிக்கு திமுக 'கல்தா'- ஒரத்தநாடுக்கு புதிய வேட்பாளர் அறிவிப்பு!



ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட மறுத்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு திமுக தலைமை கல்தா கொடுத்துள்ளது. புதிய வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம் பெண் வேட்பாளர் பவானி மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அண்மையில் திமுக தலைமை வெளியிட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக எஸ்.எஸ்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். இவர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் உடன் பிறந்த தம்பி.

இதனிடையே, 'ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை, அங்கு வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக வேறு தொகுதியை ஒதுக்குங்கள்' என தலைமையிடம் கூறி இருக்கிறார் ராஜ்குமார். இவரின் இந்த முடிவுக்கு, அங்கு நிலவும் கோஷ்டி பூசலே காரணம் என்று கூறப்பட்டாலும், சசிகலாவின் உறவினரான பழனிமாணிக்கம், சசிகலாவை அத்தாச்சி என்றுதான் அழைப்பாராம். அது மட்டும் இல்லாமல், அவர் தம்பி ராஜ்குமாரும், சசிகலா அண்ணன் மகன் மகாதேவனும் சகலைகள். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, பின்னால் இருந்து கொண்டு யாரோ இவர்களை இயக்குவதுபோல்தான் தெரிகிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமையிடம் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள நினைத்திருக்கிறார் ராஜ்குமார்.

இந்த சூழ்நிலையில், ஒரத்தநாடு தொகுதிக்கு புதிய வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேறு தொகுதியை ஒதுக்குமாறு கேட்ட எஸ்.எஸ்.ராஜ்குமாருக்கு எந்த தொகுதியும் ஒதுக்காமல் திமுக தலைமை கல்தா கொடுத்து விட்டது.

இதேபோல், அரக்கோணம் (தனி) தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவானி மாற்றப்பட்டு என்.ராஜ்குமார் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ