Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தொகுதிகளில் திடீர் மாற்றம்!

சென்னை: தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. கூட்டணியில், தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா. கூட்டணியில், தே.மு.தி.க. 104 தொகுதிகளிலும், ம.தி.மு.க. 29 தொகுதிகளிலும், த.மா.கா. 26 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்ட தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டு உள்ளன.

அதன்படி, ஏற்கனவே செய்து கொண்ட உடன்பாட்டின்படி தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் (212) சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க.விற்கும், ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி (167) சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க.விற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல், தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி (080) சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் (072) தொகுதி தே.மு.தி.க.விற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டு உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close