Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக புறந்தள்ளியது இதற்காகத்தான்!- தனித்து போட்டியிடும் வேல்முருகனின் அடேங்கப்பா காரணம்!

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன், நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன். இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்த வேல்முருகன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரது போயஸ் கார்டர் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் உள்பட 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால், விரக்தி அடைந்தார் வேல்முருகன்.

இதனிடையே, கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

நெய்வேலி தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்த வேல்முருகன், எனது கட்சியை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 


சமரசம் செய்து கொள்ளாததால் சிறிய கட்சிகளை புறந்தள்ளுகின்றனர் என்றும், சமரசமின்றி போராடுபவர்களை தேர்தலில் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close