Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்களால் வெயிலில் 10 நிமிடம் உட்கார முடியாதா?' தொண்டர்களிடம் சிடுசிடுத்த வைகோ!

தேனி: 'நீங்கள் ஒரு கட்சிக்கு தொண்டர், உங்களால் வெயிலில் 10 நிமிடங்கள் உட்கார முடியாதா?' என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ சிடுசிடுத்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்,  தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி வேட்பாளர் வீரபத்ரன் ஆகியோரை ஆதரித்து,  தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் செய்தார்.

அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ பேசும்போது, ''டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டப்பேர்வழி இந்த உலகத்திலேயே கிடையாது. நேத்து வரைக்கும் சாராயத்தை வித்துவிட்டு, மந்திரிசபையில, சட்டமன்றத்தில அதெல்லாம் மதுவிலக்கை கொண்டுவர முடியாது என்று சொல்லிவிட்டு, பெண்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள் என்று, இந்த மதுவினால் குடும்பங்கள் எல்லாம் அழியுது என்பதால் நானும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன் என்கிறார் ஜெயலலிதா" என்றார்.

அப்போது, மேடை மீது தொண்டர்கள் நின்று இருந்ததால் கோபம் அடைந்த வைகோ, தனது பேச்சை நிறுத்திவிட்டு தொண்டர்களை மேடையில் இருந்து கீழே இறங்க சொல்லி சத்தம்போட்டார். உடனே தொண்டர்களும் முணுமுணுத்தபடி மேடையைவிட்டு கீழே இறங்கினர். இதனால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பின் மீண்டும் வைகோ தனது பேச்சை தொடங்கியபோது, வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல தொண்டர்கள் கூட்டத்தைவிட்டு எழுந்து சென்றனர். இதை பார்த்து கோபம் அடைந்த வைகோ, ''ஜெயலலிதா தான் 12 ஏசியை பிரசார மேடையில் வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்காங்க. கட்சியிலேயே இல்லாத பொதுமக்கள் இங்கே வெயிலில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு கட்சிக்கு தொண்டர், உங்களால் வெயிலில் 10 நிமிடங்கள் உட்கார முடியாதா?" என்று அவர்களை பார்த்து சிடுசிடுத்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close