Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொகுதி மாறிய விஜயகாந்த் - உளுந்தூர்பேட்டையில் களம் இறங்குகிறார்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில்,  மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. இன்று 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம்:

1) உளுந்தூர்பேட்டை - விஜயகாந்த்
2) சங்கராபுரம் - கோவிந்தன்
3) உடுமலைப்பேட்டை - கணேஷ்குமார்
4) விழுப்புரம் - வெங்கடேசன்
5) மேட்டூர் - பூபதி
6) ஆத்தூர் - பாக்கியா செல்வராஜ்
7) மன்னார்குடி- முருகையன்பாபு
8) ரிஷிவந்தியம் - வின்சென்ட் ஜெயராஜ்
9) விராலிமலை - கார்த்திகேயன்
10) திண்டிவனம் - உதயகுமார்
11) ஒரத்தநாடு - டாக்டர் ப.இராமநாதன்

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்போட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ