Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசிக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 7 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி அமைத்து சந்திக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 11 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம்:

1) சோழிங்கநல்லூர் - பன்னீர் தாஸ்
2) செய்யூர் - எழில் கரோலின்
3) சேலம் தெற்கு - ஜெயசந்திரன்
4) ராசிபுரம் - க.அர்ஜுன்
5) புவனகிரி - சிந்தனைச் செல்வன்
6) குன்னம் - ஆளூர் ஷாநவாஸ்
7) மயிலம் - பாலாஜி
8) வந்தவாசி - மேத்தா ரமேஷ்
9) துறையூர் - ஆதிமொழி
10) வேலூர் - அப்துல் ரகுமான்
11) ஊத்தங்கரை - கனியமுதன்


புதுச்சேரியில் 7 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. தற்போது இரண்டு தொகுதிகளின் பட்டியலை திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதன் படி, ஊசூடு தொகுதியில் அங்காளனும், வில்லியனூர் தொகுதியில் முகமது ஹாலித்தும் போட்டியிடுகின்றனர்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close