Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ம.க.வின் 4 மற்றும் 5-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது!

சென்னை: பா.ம.க.வின் 4 மற்றும் 5-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து களம் காண்கிறது. பா.ம.க., முதல்மைச்சர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்து உள்ளது. பா.ம.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, தற்போது வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.

நேற்று முன் தினம் வரையில் 117 வேட்பாளர்களை கொண்ட பா.ம.க. பட்டியல் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நேற்று காலை 90 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை பா.ம.க. வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 18 வேட்பாளர்கள் கொண்ட பா.ம.க.வின் 4-வது பட்டியல் வெளியிடப்பட்டது.

1. கிணத்துக்கடவு - ரா.சின்னச்சாமி.

2. சிங்காநல்லூர் - அசோக் ஸ்ரீநிதி.

3. பொள்ளாச்சி - வி.சு.கண்ணப்பன்.

4. திருக்கோவிலூர் - பால.சக்தி.

5. திருவாடானை - வே.பாண்டி.

6. பவானி - கே.வி.ராமநாதன்.

7. அந்தியூர் - எஸ்.சி.ஆர்.கோபால்.

8. சேலம் தெற்கு - கி.குமார்.

9. முசிறி - பெ.மனோகரன்.

10. வேளச்சேரி - என்.வினோபா பூபதி.

11. மயிலாப்பூர் - மீனாட்சி அனந்த்.

12. சைதாப்பேட்டை - தி.இரா.சகாதேவன்.

13. விருகம்பாக்கம் - சி.எச். ஜெயராவ்.

14. அண்ணாநகர் - அகிலேஷ் அரனி மல்லிச்செட்டி.

15. ஆயிரம் விளக்கு - வி.ரங்கநாதன் என்ற ரங்கன்.

16. ராயபுரம் - டி.எஸ்.பெருமாள்.

17. வில்லிவாக்கம் - ஜி.வி.சுப்பிரமணியன்.

18. பெரம்பூர் - மா.வெங்கடேசன் பெருமாள்

இதை தொடர்ந்து, பா.ம.க.வின் 5-வது வேட்பாளர் பட்டியலும் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

1. தர்மபுரி - டாக்டர் இரா.செந்தில்

2. பாலக்கோடு - அ.சரவணன்

3. பாப்பிரெட்டிப்பட்டி - அ.சத்தியமூர்த்தி

4. அரூர் (தனி) - ச.முரளி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ