Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவது ஏன்? பாமக பாலு சொல்லும் அடேங்கப்பா காரணம்!

 

"பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையில் வெற்றி பெற்றேன் என்று சொல்லிவந்த விஜயகாந்தை தோற்கடிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று உளுந்தூர்பேட்டை பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாமக சார்பில் ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எதிர்த்து, அதிமுக சார்பில் குமரகுருவும், திமுக சார்பில் வசந்தவேலும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் சபா ராஜேந்திரனும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த்துக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ள பாமக வழக்கறிஞர் பாலு இது குறித்து கூறுகையில், " பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையில் வெற்றி பெற்றேன் என்று சொல்லிவந்த விஜயகாந்தை தோற்கடிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரபலமானவர் என்ற தகுதியின் அடிப்படையில் என்னை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். விருத்தாச்சலத்தில் சினிமா மாயையின் காரணமாக வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு அதிமுக ஆதரவில் வெற்றி பெற்றார். இப்போது விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் வெற்றிபெற மாட்டார் என்பது அவர்களின் கட்சியினருக்கே தெரியும்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ