Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜோதிமணியைக் கண்டிக்கச் சொன்னாரா ராகுல் காந்தி!?

ட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியை பெற்றுத்தருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்குறுதி அளித்ததாக கூறி,  அத்தொகுதியில் கடந்த ஒருவருடமாகவே தீவிர பிரசாரம் செய்து வந்தார் ஜோதிமணி. இந்நிலையில், காங்கிரஸ் - திமுக தொகுதி உடன்பாட்டின்போது அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த ஜோதிமணி, அதே தொகுதியில் தான் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். "ராகுல் காந்தி அரவக்குறிச்சியை எனக்கு ஒதுக்க சொல்லி பேசுமாறு சொல்லியும், எனக்கு சீட் கிடைக்காமல் சதி செய்தது இளங்கோவன்தான். இதில் தி.மு.க தலைமையின் தூண்டுதல் எதுவும் இல்லை. இந்தத் தொகுதியைப் பெறுவதற்கு இளங்கோவன் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. அடுத்த தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியில் வளருவதை இளங்கோவன் விரும்பவில்லை" என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இது தமிழக காங்கிரஸ் வட்டாரத்திற்கு அதிர்ச்சியை தந்தது. அவருடன் இளங்கோவன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் ஜோதிமணி தன் அறிவிப்பில் இருந்து பின்வாங்கவில்லை. இதனையடுத்து ஒருகட்டத்தில், 'தலைமையின் முடிவைத் தாண்டி ஜோதிமணி போட்டியிட்டால் அவரைக் கட்சியை விட்டு நீக்குவோம்' என அசரடித்தார் ஈ.வி.கே.எஸ்.

மாநிலத் தலைமையின் இந்த முடிவை ஜோதிமணி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து சுயேட்சையாக நிற்கும் தனது முடிவை கைவிட்ட ஜோதிமணி,  “ அரவக்குறிச்சி தொகுதியில் நான் சுயேட்சையாக நிற்கப்போவதில்லை. அதே சமயம்,  அரவக்குறிச்சியில் திமுக - காங்கிரஸ் வெற்றி பெற பணி செய்ய மாட்டோம்" என கடந்த ஞாயிறன்று அறிவித்தார்.

இந்நிலையில் ஜோதிமணியின் இந்த போக்கு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் முழு தகவல்களையும் கேட்டு கடும் கோபமுற்று,  அவரை கண்டிக்க சொன்னதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"அரவக்குறிச்சியை பெறுவதற்காக ராகுல்காந்தி கடுமையாக முயற்சி செய்தார் என்ற தகவல் முற்றிலும் தவறானது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னரும், பிடிவாதமாய் நின்று, தொகுதி கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாய் போட்டியிடுவேன் என்று சொன்னது ராகுல் காந்தியை கடும் கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

ஒழுங்கீனங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, சுயேட்சையாய் களமிறங்கினால் கட்சியை விட்டு நீக்குங்கள் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் சொன்னதே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி கேட்டும் அரவக்குறிச்சியை திமுக கொடுக்கவில்லை என்று ஜோதிமணி சொல்வது, ராகுல்காந்திக்கு அந்த அளவு செல்வாக்கில்லை என்று காட்டுவதற்காகத்தான். ராகுல் காந்தி கேட்டிருந்தால், திமுக தர மறுத்துவிடுமா? அவர் அஸ்ஸாம், மேற்கு வங்கத் தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வில், அதற்காக அமைக்கப்பட்ட குழுக்களே கவனித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். அதில் அவர் தலையிடவே இல்லை. ராகுல் காந்தியின் பெயரை ஜோதிமணி தவறாகப் பயன்படுத்துவதாகவும் ராகுல் காந்தி கோபப்பட்டிருக்கிறார். ராகுல் காந்தியின் உதவியாளர் ஒருவர் அழைத்து, ராகுல் காந்தி பெயரை தவறாக உபயோகிக்க வேண்டாம் என்று எச்சரித்த பின்னரே ஜோதிமணி பின்வாங்கினார் என்பதுதான் உண்மை" என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எடிட்டர் சாய்ஸ்