Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா, ஸ்டாலினை எதிர்த்து களம் இறங்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

 

பா.ஜனதா 4-வது கட்டமாக 26 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து எம்.என்.ராஜாவும், கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கே.டி.ராகவனும் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பா.ஜனதா, ஏற்கனவே 3 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. 4-வது கட்டமாக 26 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா மேலிடம் இன்று அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து எம்.என்.ராஜா போட்டியிடுகிறார். இதேபோல மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கே.டி.ராகவன் போட்டியிடுகிறார்.

பா.ஜனதா வேட்பாளர்கள் விவரம்:


1. பொன்னேரி (தனி) -கே.கணேசன்
2. மாதவரம் -ஆர்.எம்.ஆர். ஜானகிராமன்
3. திருவொற்றியூர் -எம்.சிவக்குமார்
4. ஆர்.கே.நகர் -எம்.என்.ராஜா
5. கொளத்தூர் -கே.டி.ராகவன்
6. செய்யூர் (தனி) -பி.சம்பத்ராஜ்
7. ராணிப்பேட்டை - வி.நாகராஜ்
8. ஊத்தங்கரை (தனி) - எஸ்.ஏ.பாண்டு
9. ஆரணி -பி.கோபி
10. திண்டிவனம் (தனி) -பூவழகி


11. விக்கிரவாண்டி -ஆர்.எஸ்.ஆதவன்
12. பரமத்திவேலூர் - ராஜ்கவுண்டர் என்ற ராஜ்குமார்
13. குமாரபாளையம் - கே.ஈஸ்வரன்
14. கோபிசெட்டிபாளையம் - கே.கணபதி
15. குன்னூர் - பி.குமரன்
16. அவினாசி (தனி) - சி.பெருமாள்
17. வால்பாறை (தனி) - பி.முருகேசன்
18. பழனி -எம்.ஆர்.கனகராஜ்
19. குளித்தலை -என்.கே.என்.சதக்கத்துல்லா
20. சிதம்பரம் - ஜி.மணிமாறன்


21. சீர்காழி - எம்.ஆர்.எஸ்.இளவழகன்
22. திருமயம் - இ.வடமலை
23. திருப்பத்தூர் - வி.கோவிந்தராஜன்
24. உசிலம்பட்டி - எம்.சம்கிளி
25. ஆண்டிப்பட்டி - எஸ்.ஆர்.சக்கரவர்த்தி
26. ஆலங்குளம் - எஸ்.வி.அன்புராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ