Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விஜயதாரணி, எச்.வசந்தகுமாருக்கு வாய்ப்பு!

சென்னை: தி.மு.க.வுடன் இணைந்து தமிழக தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதைய காங்கிரஸ் உறுப்பினர்கள் விஜயதாரணி, எச்.வசந்தகுமார், ஜெ.ஜி.பிரின்ஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்

வேட்பாளர்கள் தேர்வு முடிவடைந்த நிலையில், உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சியின் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில், 33 தொகுதிகளில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்:

1. திருத்தணி - ஏ.ஜி.சிதம்பரம்

2. அம்பத்தூர் - ஹசன் மவுலானா

3. ராயபுரம் - ஆர்.மனோ

4. சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம்

5. ஓசூர் - கே.கோபிநாத்

6. கலசப்பாக்கம் - செங்கம் ஜி.குமார்

7. ஆத்தூர் (தனி) - எஸ்.கே.அர்த்தனாரி

8. சங்ககிரி - டி.கே.ராஜேஸ்வரன்

9. நாமக்கல் - டாக்டர் ஆர்.செழியன்

10. தாராபுரம் (தனி) - வி.எஸ்.காளிமுத்து

11. கோபிசெட்டிப்பாளையம் - எஸ்.வி.சரவணன்

12. உதகமண்டலம் - ஆர்.கணேஷ்

13. சூளூர் - வி.எம்.சி.மனோகரன்

14. கோவை (தெற்கு) - மயுரா எஸ்.ஜெயக்குமார்

15. வேடச்சந்தூர் - ஆர்.சிவசக்திவேல் கவுண்டர்

16. கரூர் - கே.சுப்பிரமணியம்

17. திருச்சி (கிழக்கு) - ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ்

18. முசிறி - எஸ்.விஜயா பாபு

19. ஜெயங்கொண்டம் - ஜி.ராஜேந்திரன்

20. காட்டுமன்னார்கோவில் (தனி) - டாக்டர் கே.ஐ.மணிரத்தினம்

21. வேதாரண்யம் - பி.வி. ராஜேந்திரன்

22. நன்னிலம் - எஸ்.எம்.பி. துரைவேலன்

23. பாபநாசம் - டி.ஆர். லோகநாதன்

24. பட்டுக்கோட்டை - கே.மகேந்திரன்

25. அறந்தாங்கி - எஸ்.டி. ராமச்சந்திரன்

26. காரைக்குடி - கே.ஆர். ராமசாமி

27. மதுரை (வடக்கு) - வி.கார்த்திகேயன்

28. திருமங்கலம் - ஆர்.ஜெயராம்

29. முதுகுளத்தூர் -எஸ்.பாண்டி

30. தென்காசி - பழனி நாடார்

31. நாங்குநேரி - எச்.வசந்தகுமார்

32. குளச்சல் - ஜெ.ஜி. பிரின்ஸ்

33. விளவங்கோடு - விஜயதரணி

கடந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேரில், 2 பேர் (ஜான் ஜேக்கப், ரெங்கராஜன்) ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து மற்ற 3 பேருக்கும் (விஜயதரணி, ஜெ.ஜி.பிரின்ஸ், கே.கோபிநாத்) மீண்டும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான மயிலாப்பூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், செய்யார், காங்கேயம், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகியவற்றுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ