Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காட்டுமன்னார்கோவிலில் திருமா, ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி..!- வி.சி.க வேட்பாளர் பட்டியல்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

அடுத்த மாதம் (மே) 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்து விட்டன. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (20-ம் தேதி) வெளியிட்டார்.

அப்போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் (தொல்.திருமாவளவன்) போட்டியிடுவதாகவும், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

மற்ற 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் சில மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ