Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் மீண்டும் மக்களை வெயிலில் வாட்டும் மக்களின் முதல்வர் பிரசாரம்! - இது சேலம் சோதனை! (படங்கள்)

சேலத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில்,  லட்சக்கணக்கானவர்கள் கொளுத்தும் வெயில் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டத்தில் இருந்து வெளியே செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 46 வேட்பாளர்களை ஆதரித்து,  அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று  பிரசாரம் மேற்கொண்டார்.

சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காட்டுப்பகுதியான இந்த பகுதியில் கூட்டம் நடைபெற்றதால் லட்சக்கணக்கானோர் ரிப்பர் லாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். கொளுத்தும் வெயிலில் அவதிப்படும் அவர்களுக்கு தொப்பி, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடுமையான வெயில் காரணமாக தண்ணீர் பாக்கெட்டுகளும் உருகிப் போவதால் கூட்டத்திற்கு வந்தவர்கள், கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி, படங்கள்: வி.கே.ரமேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ