Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள் தேர்தலுக்குப்பின் வருந்தும்! பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

கன்னியாகுமரி: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தலுக்குப்பின் வருந்தும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தக்கலையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கையைதான் மத்திய அரசு மேற்கொள்ளும்.

மக்கள் நலக் கூட்டணி ஒரு கூட்டணி கட்சியே அல்ல. நேரத்திற்கு ஒருமுறை பெயரை மாற்றி கொண்டு இருக்கிறது. அந்த கூட்டணிக்கு கொள்கை எதுவும் கிடையாது. தி.மு.க.வும், பா.ம.க.வும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தமிழக அரசு, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை.  பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப் பின் வருந்தும், மிகுந்த வேதனையை உணரும் சூழல் உருவாகும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close