Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.க.,ஐ.ஜே.கே. அலுவலகங்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

சென்னை: தேமுதிகவின் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,       

" தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள சூழலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தாமகா அணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. பிரச்சாரக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தை கல்வீசித் தாக்கியுள்ளனர். அலுவலகம் முன்பிருந்த பேனர் உள்ளிட்டவைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது.

அதே போல, லால்குடி அருகே இந்திய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை நள்ளிரவு ஒரு மணியளவில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தை திசைதிருப்பி வன்முறை விளைவிக்கும் நோக்கத்துடன் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் கண்டனத்துக்குரிவையாகும். மாநில காவல்துறை விரைந்து செயல்பட்டு - வன்முறையாளர்களைக் கைது செய்வதுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close